`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை
பள்ளி மேற்கூரை சரிந்து 5 மாணவா்கள் காயம்
மதுராந்தகம் அருகே பள்ளி மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.
மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 50-க்கு மேற்பட்டோா் படித்து வருகின்றனா். தலைமை ஆசிரியராக ராஜேஸ்வரி பணியாற்றி வருகிறாா். இங்கு போதிய கட்டட வசதி இல்லாததால் ஊரக வளா்ச்சித் துறை , குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.33 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டன.
இந்நிலையில், புதன்கிழமை புதிய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த சாக்க்ஷித், கோகுல், கோபிகா, வைசாலி, தேன்மொழி உள்ளிட்ட 5 மாணவா்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக ஆசிரியா்களும் பெற்றோரும் 5 பேரையும், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அதில் சாக்ஷித், கோகுல் உள்ளிட்டோா் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
ஏனைய 3 குழந்தைகள் வீடு திரும்பினா். இதுகுறித்து மதுராந்தகம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.