செய்திகள் :

விநாயகர் சிலைகளில்கூட இறக்குமதி.. சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்!

post image

சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக் காலங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களைத் தவிர்த்துவிட்டு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை வாங்கி உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

மேலும், விநாயகர் சதுர்த்தி போன்ற நாள்களில் விநாயகர் சிலைகள்கூட சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்” என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டுப் பொருள்களை விற்கமாட்டோம் என்று உள்ளூர் வியாபாரிகள் உறுதியேற்க வேண்டும்” என்றார்.

இந்திய சந்தைகளில் வெளிநாட்டுப் பொருள்கள் வெள்ளம் போல குவித்து கிடக்கின்றன எனக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “விழாக் காலங்களில் விநாயகர் சிலைகள்கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது துரதிருஷ்டவசமானது.

சிறிய கண்களுடன் சரியாக கண்கள்கூட திறக்கப்படாமல் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு (சீனர்களின் சிறிய கண்களை ஒப்பிட்டு) இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஹோலிக்கு பயன்படுத்தப்படும் வண்ணப் பொடிகளும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

சீனாவிலிருந்து மிகவும் மலிவான விலையிலும் தரம் குறைந்து உருவாக்கப்படும் சிலைகள், பட்டாசுகள், வண்ண விளக்குகள், அலங்காரப் பொருள்கள், பொம்மைகள் ஆகியவை விழாக் காலங்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.

அதேபோல, உங்கள் வீடுகளில் எத்தனை வெளிநாட்டுப் பொருள் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். அதில் சீப்பு, ஹேர் பின் உள்ளிட்டவைகள் இருக்கும். இந்தியாவை காப்பாற்ற, உருவாக்க, வளரச் செய்ய ஆயுதப் படைகளின் ஆபரேஷன் சிந்தூர் மட்டும் போதாது. 140 கோடி மக்களின் பொறுப்பும் அவசியம்” என்றார் பிரதமர் மோடி.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!

விரைவில் இந்தியாவுடன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பே... மேலும் பார்க்க

என்கவுன்டரில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் ஷூட்டர் கொலை!

உத்தரப் பிரதேசத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஷூட்டரை காவல்துறையினர் வியாழக்கிழமை என்கவுன்டர் செய்துள்ளனர்.உத்தரப் பிரதேச சிறப்பு காவல் படை மற்றும் தில்லி போலீஸ் இணைந்த... மேலும் பார்க்க

கர்நாடகத்தைக் கலங்கடிக்கும் கரோனா: ஒருவர் பலி!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 70 வயது முதியவர் கரோனா பாதித்து பலியானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற சந்தேகத்தின்பேரில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஷாகுர் கான் என்பவரை, புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை ... மேலும் பார்க்க

மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து! ஏன்?

பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவில் இருந்து காணொலி காட்சி மூலம் சிக்கிம் நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க