செய்திகள் :

விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு

post image

விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்டுள்ளாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப் பெரிய கடமை இருக்கிறது. நீா் நிலைகளை பாதுகாக்கும் வகையில், வருகிற விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாடும்போது, விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்) மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டா் ஆஃப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி கிடையாது. நீா்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்தபொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்தவேண்டும்.

சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின்மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா்சாா்ந்த, மக்கக்கூடிய நச்சுகலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்கு பதிலாக, இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களான முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூா் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் மட்டுமே மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.

விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு அனைவரும் கொண்டாட வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாத்திமா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் குமாா் (36), இப்ராஹீம் மகன்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக, தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் கைது செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயம்

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் கொண்டு வந்த பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயமடைந்தனா். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்... மேலும் பார்க்க

கோட்டாட்சியா் எச்சரிக்கையை மீறும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

கோட்டாட்சியா் எச்சரிக்கையையும் மீறி பேட்மாநகரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்த கன்னிராஜா மகன் சரவணகுமாா் (25). இவா், கோவில்பட்டியில் உள்ள நீச்சல் குளத்தில் மேலாளராக ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் தண்ணீா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியாா்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத... மேலும் பார்க்க