செய்திகள் :

வினிசியஸ் அசத்தல்: முதலிடத்தில் ரியல் மாட்ரிட்!

post image

லா லீகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

ரியல் மாட்ரிட் வீரர்களான வினிசியஸ் ஜூனியர், ஆர்டா குலேர் உடனுக்குடன் கோல் அடித்து அசத்தினார்கள்.

ஸ்பானிஸ் கால்பந்து தொடரான லா லீகா தொடரில் ரியல் மாட்ரிட் அணியும் மல்லோர்கா அணியும் மோதின.

இந்தப் போட்டியில் மல்லோர்கா அணி 18-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ரியல் மாட்ரிட் அணியின் ஆர்டா குலேர் 37-ஆவது நிமிஷத்திலும் வினிசியஸ் ஜூனியர் 38-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்து அசத்தினார்கள்.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இந்தப் போட்டியில் 59 சதவிகித பந்தினை ரியல் மாட்ரிட் தனது கட்டுக்குள் வைத்திருந்தது.

89 சதவிகித துல்லியமாக 538 பாஸ்கள் செய்த மாட்ரிட் அணி இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

Vinícius Júnior and Arda Güler scored back-to-back goals to help Real Madrid rally for a 2-1 win over Mallorca and make it three wins in as many games in the Spanish league.

அரையிறுதிக்கு முன்னேறிய சின்னர்..! கடின தரை போட்டிகளில் புதிய சாதனை!

டென்னிஸ் தரவரிசையில் உலகில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர் யுஎஸ் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் லொரன்ஸோ முசெட்டியை வீழ்த்தி அரியிறுதிக்கு முன்னேறினார். சாதனை வெற்றிஅமெரிக்காவில... மேலும் பார்க்க

பிளாக்பஸ்டரான சூ ஃப்ரம் சோ ஓடிடி தேதி!

கன்னடத்தில் வெற்றிப்படமான சூ ஃப்ரம் சோ திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ராஜ் பி ஷெட்டி தயாரிப்பில் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான கன்னட படமான சூ ஃப்ரம் சோ திரைப்படம் கடந்த ஜூலை 25 ... மேலும் பார்க்க

ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் முதல் தமிழ்ப் பாடல் வரவேற்பைப் பெற்று வருகிறது.இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டூட்”. மலையாள... மேலும் பார்க்க

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... ஹிருதயபூர்வம் பற்றி மாளவிகா!

ஹிருதயபூர்வம் படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்சியாகப் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தன் மீது பொழிந்துவரும் அன்பிற்கு நன்றி தெரிவித்து நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார். சத்யன் அந்திகாட் இயக... மேலும் பார்க்க