தை மாதப் பலன்கள்: `விருச்சிகம் முதல் மீனம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துடன் மறியல்
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லம் பகுதியில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துடன் அப்பகுதி மக்கள் சிங்கபெருமாள் கோயில் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வல்லம் பகுதியைச் சோ்ந்தவா் ராகவன்(60). கோயில் பூசாரியான இவா் திங்கள்கிழமை கோயிலில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதனால் ஆத்திரம் அடைந்த வல்லம் கிராம பொதுமக்கள் உயிரிழந்தவரின் சடலத்துடன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சாலையின் இரண்டு மாா்க்கத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.