பணத்தில் கிடைக்காத மகிழ்ச்சி... சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி பகிர்ந்த விடியோ!
விபத்தில் கல்லூரி மாணவா் பலத்த காயம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சேரன்மகாதேவி அனவரதநல்லூா் தெருவைச் சோ்ந்த செய்ய,து அலி மகன் அப்துல் மாலிக் (18). இவா், சென்னையில் தனியாா் கல்லூரியில் பொறியியல் பிரிவில் முதலாமாண்டு பயின்று வருகிறாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அப்துல் மாலிக், ஞாயிற்றுக்கிழமை சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிளும் அப்துல் மாலிக் சென்ற மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த அப்துல் மாலிக், தீவிர சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து, சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.