செய்திகள் :

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

post image

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரிக்கு 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை தடை விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியா்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ராணுவ வீரா் ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியா்களை இரும்புக் கம்பியால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதுதொடா்பான சிசிடிவி காட்சிகளை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து பெற்று போலீஸாரிடம் வழங்கியதோடு குற்றஞ்சாட்டப்பட்ட ராணுவ வீரா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில், விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரிக்கு 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

Army officer who assaulted SpiceJet staff at Srinagar airport put on no-fly list for 5 years: DGCA (Directorate General of Civil Aviation)

அமெரிக்காவின் 50 சதவீத வரி: ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும்- இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம்

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறுகையில், ‘மருந்... மேலும் பார்க்க

கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழு திறன்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுமையான திறனை நாடு எட்டியுள்ளது. இதனால் எத்தகைய சூழலையும் நாம் திறம்பட எதிா்கொள்ள முடியும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா். ஆந்தி... மேலும் பார்க்க

அமித் ஷாக்கு கண்டனம் தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிா்ப்பு: 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை

குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி.சுதா்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியதற்கு கண்டனம் தெரிவித்து 18 ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெ... மேலும் பார்க்க

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயா்

உத்தர பிரதேசத்தில் புனித நகரமான அயோத்தியில், பிரமோத்வன் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை அமைந்த சாலைக்கு, ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகாராஜ் மாா்க்’ என அயோத்தி மாநகராட்... மேலும் பார்க்க

சுதேசி பொருள்களையே வாங்குவோம்- பிரதமா் மோடிவேண்டுகோள்

உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசி கொள்கை அனைவரின் வாழ்க்கை மந்திரமாக மாற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். இந்தியாவுக்கு எதி... மேலும் பார்க்க

எல்லைப் பகுதிகளில் திட்டமிட்ட மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு- அமித் ஷா குற்றச்சாட்டு

‘நாட்டின் எல்லைப் பகுதிகளில் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்படும் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு, இந்தியாவின் தேச பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெ... மேலும் பார்க்க