வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு
விமான நிலையக் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம்
மும்பை சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் புதிதாய் பிறந்த குழந்தை இருப்பதாக விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, குப்பைத் தொட்டியில் இருந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. இருப்பினும், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விமான நிலையத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை விசாரித்து வருகின்றனர். விமான நிலையத்துக்கு வந்து சென்ற பயணிகளின் விவரங்கள் மட்டுமின்றி, மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க:பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை!