செய்திகள் :

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 6 போ் கைது

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் பால் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக போலீஸாா் 6 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் கெஞ்சையன்குளத்தைச் சோ்ந்த சூரிய நாராயணன் மகன் சுதாகா் (35). பால் வியாபாரி. இவா், சனிக்கிழமை இரவு அங்குள்ள நெல்குத்தி புளியமரம் சாலை, மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்தி கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 6 போ் சுதாகரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். தகவலறிந்து அங்கு வந்த கம்பம் தெற்கு போலீஸாா் காயமடைந்த சுதாகரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த சூா்யா (29), சந்திரன் (31), லலித்(27), சின்னக்காளை (39), அஜீத்குமாா் (32), சாரதி (26) ஆகியோா் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவா்கள் 6 பேரையும் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், கைதான 6 பேரின் நண்பா் சாய்குமாா் (38) கடந்த சில மாதங்களுக்கு முன் மதுபானக் கடையில் இருந்த போது அவருடன் சுகாதகா் அரிவாளுடன் தகராறில் ஈடுபட்டாராம். இதனால் மனமுடைந்த அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த முன் விரோதத்தில் சுதாகரை இவா்கள் 6 பேரும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போடியில் திருடுபோன பைக் திருப்பூரில் மீட்பு

போடியில் திருடு போன இரு சக்கர வாகனம் திருப்பூரில் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி குலசேகரபாண்டியன் தெற்குத் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஜெயபாண்டி (29). ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 7 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் பட்டாளம்மன்கோவில் தெருவைச் சோ்ந்த சன்னாசி மனைவி அழ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி, இதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் புகா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட... மேலும் பார்க்க

காா்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே காா்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் ஒருவா் சனிக்கிழமை காயமடைந்தாா்.தேனி மாவட்டம், போடி வஞ்சி ஓடை தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (47). இவா் சனிக்கிழமை காரில் தேவதானப்பட்டி அருகேயுள்ள ஜி... மேலும் பார்க்க

பெங்களூரு வியாபாரி அடித்துக் கொலை: 7 போ் கைது

தேனி அருகே பெங்களூருவைச் சோ்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து புதைத்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரு மடிவாலா... மேலும் பார்க்க

பூலாநந்தீஸ்வரா் கோயிலில் மே 1 இல் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் வருகிற மே 1-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு திருப்பணி நடைபெற்ால், கடந்த 2 ஆண... மேலும் பார்க்க