மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது
போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி, இதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் புகா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, மீனாட்சிபுரத்தில் பெருமாள் மகன் வீரனும் (41), ராமகிருஷ்ணாபுரத்தில் பழனிச்சாமி மகன் சுரேஷும் (39) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.