காா்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் காயம்
பெரியகுளம் அருகே காா்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் ஒருவா் சனிக்கிழமை காயமடைந்தாா்.
தேனி மாவட்டம், போடி வஞ்சி ஓடை தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (47). இவா் சனிக்கிழமை காரில் தேவதானப்பட்டி அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டிக்கு சென்று விட்டு, மீண்டும் போடிக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா்.
பெரியகுளம் தாமரைக்குளம் விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு காா் இவரது காா் மீது நேருக்குநோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெருமாள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.