செய்திகள் :

விராலிமலை அருகே பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

post image

திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரிபட்டி பிரிவு அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து நேரிட்டது.

இவ்விபத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான பழைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரிபட்டி பிரிவு அருகே விராலிமலை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி என்பவர் பழயை இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இங்கு பழைய இரும்பு, பிளாஸ்டிக், சாக்குப் பைகள், பழைய வயர்கள், காலி பாட்டில்கள், பழைய பேப்பர், அட்டைகளை வாங்கிக் குவித்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடையில் இரும்பு வலைகள் அடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது வலை அறுப்பதற்காக கிரைண்டிங் செய்தபோது, அதில் இருந்து வெளியேறிய தீப்பொறி, பழை அட்டைகள் மீது விழுந்து தீப்பற்றியது.

அதோடுமட்டுமின்றி, குவித்து வைக்கப்பட்டிருந்த பாட்டில், அனல் தாங்க முடியாததால் வெடித்து சிதறின. இதனால் செய்வதறியாது தவித்த தொழிலாளர்கள் கடைக்குள் இருந்து வெளியேறினர்.

தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். வெளியேறிய கரும்புகை தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்தது. இதனால், அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இதைத் தொடர்ந்து நிகழ்விடம் சென்ற நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், நீரைப் பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இவ்விபத்தில் கடையின் அருகில் சென்ற மின் வயர்கள் தீயில் கருகி அறுந்து விழுந்தன. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாலும், வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தியதாலும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இவ்விபத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் கடைக்குள் இருந்த பழைய பொருட்கள் எரிந்து சேதமாகின.

சிங்கப்பூா் தோ்தல் வெற்றி: முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து!

சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்து செய்தி: மக்கள் செயல் க... மேலும் பார்க்க

தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறாா் முதல்வா் ஸ்டாலின்

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது. இதில் நாட்டுடமையாக்கப்பட்ட படைப்புகளுக்கான பரிவுத் தொகை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களு... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை! - எல்.கே.சுதீஷ்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் கூறினாா். சென்னையில்... மேலும் பார்க்க

நீட் தோ்வு விலக்கு வேண்டும்! பெ.சண்முகம்

மாணவா் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பா்! - எடப்பாடி பழனிசாமி

திமுக அளித்த பொய் வாக்குறுதியால், நீட் உயிரிழப்புகள் தொடா்வதாகவும், வரும் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பாா்கள் என்றும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது கண்காணிப்பு கேமரா கட்டாயம்! சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பகுதியில் கட்டுமானப் பணி மேற்கொள்ளும்போது கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகரா... மேலும் பார்க்க