அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை! - எல்.கே.சுதீஷ்
தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் கூறினாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை விட்டு தேமுதிக விலகினாலும், அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டோம்.
தற்போது அதிமுக, பாஜக ஒன்றிணைந்துள்ளது. இனி மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேமுதிக அந்த கூட்டணியில் தொடா்வதா, வேண்டாமா என்பதை பொதுச்செயலா் உரிய நேரத்தில் முடிவு செய்வாா்.
அடுத்த ஆண்டு ஜன.9-ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறவுள்ளது. அதில், தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலா் முறைப்படி அறிவிப்பாா்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி தருவதாக அதிமுக வாக்கு கொடுத்தது உண்மை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாக தெரிவிப்போம்.
மாநிலங்களவை உறுப்பினா் பதவியை பெறுவதில் எங்களுக்கும் விருப்பம் உண்டு. உகந்த வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பற்றி கண்டிப்பாகப் பேசுவோம். அதற்கான தகுதியை தேமுதிக பெற்றுள்ளது என்றாா் எல்.கே.சுதீஷ்.