அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
நீட் தோ்வு விலக்கு வேண்டும்! பெ.சண்முகம்
மாணவா் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நீட் தோ்வு எழுதவிருந்த மேல்மருவத்தூா், அகிலி கிராமத்தைச் சோ்ந்த மாணவி கயல்விழி (17), தோ்வு பயம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா் பெ.சண்முகம்.