செய்திகள் :

விருதுநகர்: ஜவுளிப் பூங்கா இடத்தில் கிராவல் மண் கடத்தலா? - முள்வேலி அமைத்து கண்காணிக்க கோரும் மக்கள்

post image

விருதுநகர் மாவட்டத்தில் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் மத்திய‌ அரசின்‌ நிதி ஒதுக்கீட்டின்‌பேரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமையவுள்ளது. சுமார் 1,052 ஏக்கரில் அமையவுள்ள இந்த ஜவுளி பூங்காவுக்கான திட்ட அலுவலக கட்டுமான பணிகள் ஏறத்தாழ 90 சதவிகிதம் முடிந்துவிட்டன. இன்னும் மீதமுள்ள சிப்காட் கட்டமைப்பு பணிகள்‌ வேக, வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிப்காட் இடத்திற்கு அருகே இரவு பகலாக, சிலர் கிராவல் மண் அள்ளி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. லாரி-லாரியாக மண் அள்ளும் வேலை நடப்பதால் அப்பகுதியே பெரும் பள்ளமாக காட்சியளிக்கிறது. மண் அள்ளப்பட்டுள்ள இடம் சிப்காட்டுக்கு சொந்தமானதா? அல்லது நீர்வரத்து ஓடைப்பகுதியில் அனுமதியின்றி அள்ளப்படுகிறதா? எனவும் சந்தேகம் கிளம்பியது. இது குறித்து விளக்கம்பெற வருவாய்துறையினர் சிலரிடம் பேசினோம். அப்போது அவர்கள், "ஜவுளி பூங்கா‌ அமையவுள்ள இடத்துக்கு அருகே அர்ஜூனா நதியின் நீர் வழித்தடம்தான்‌ உள்ளது.‌ அர்ஜூனா நதி நீர்‌வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு தடைவிதித்தும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மண் அள்ளுதல்

இந்த நிலையில், சிப்காட்டுக்கு அருகே கிராவல் மண் அள்ளுபவர்கள் பொதுப்பணித்துறையிடம் முறையான பாஸ் பெற்றுள்ளார்களா எனத் தெரியவில்லை. அதுபோல், ஜவுளி பூங்காவிற்கான அதிகாரபூர்வ வரைபடமும் கையில் இல்லாததால், கிராவல் மண் அள்ளப்பட்டுள்ள இடம் சிப்காட்டுக்கு சொந்தமானதா என்பதை கண்டறிய முடியவில்லை. மண் அள்ளுபவர்கள்‌ குறித்து விசாரணை செய்ததில், கிராவல் மண் அள்ளுவதற்கு பாஸ் வைத்திருப்பதாக கூறும் நபர்கள், ஆளுங்கட்சி புள்ளிகளின் பெயரைக் கூறி மிரட்டுகிறார்கள்.

லாரிகள்

ஆகவே, இது போன்ற சிக்கல்களை களைய, சிப்காட் பகுதியின் முறையான வரைபடத்தை அதிகாரபூர்வமாக மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும். மேலும் சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களைச் சுற்றி முள்வேலி அமைத்து, எல்லை கற்களை நட வேண்டும்" என்றனர்.

சிப்காட் இடம்

இது குறித்து சிப்காட் திட்ட அதிகாரி மணிவண்ணனிடம் விளக்கம் கேட்டபோது, "சிப்காட்டிற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தையொட்டியே அர்ஜுனா நதியின் நீர்வழித்தடமும் உள்ளது. அங்கு கிராவல் மண் எடுப்பதற்கு நீர் வளத்துறையிடம் அனுமதி வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.‌ முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும்" என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், "இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி‌, நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார் சுருக்கமாக.

ASER 2024: `தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்!' - ரவிக்குமார் எம்.பி கவலை

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி ரவிக்குமார் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில், "இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின்... மேலும் பார்க்க

திருப்பத்தூர் ஏரியின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; தூய்மைப்படுத்தி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ளது பெரிய ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி, மக்களின் மீன் பிடி தொழிலுக்கும் வேளாண் பாசன வசதிக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.ஆனால்,... மேலும் பார்க்க

`மருத்துவப் படிப்பில் 1200 க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம்' - அமைச்சர் மா.சுப்ரமணியன் வேதனை

மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு, 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு, ... மேலும் பார்க்க

Trump: 'அரசு ஊழியர்களே, பணியில் இருந்து விலகலாம்; 8 மாத சம்பளம்..!' - எலான் மஸ்க் பாணியில் ட்ரம்ப்?

ஜனவரி 20, 2025... அமெரிக்க பிரதமராக பதவியேற்ற அந்த நொடியில் இருந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ட்ரம்ப். அதில் ஒன்று இப்போது, 'அமெரிக்க அரசு ஊழியர்களை பணியில் இருந்து விலக' சொல்வதாகும்... மேலும் பார்க்க

`டேக் ஆஃப்’ ஆகும் கோவை `மெட்ரோ ரயில்’ திட்டம் - சத்தி சாலையில் அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டே மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி க... மேலும் பார்க்க

Rajasthan: ``நிலத்திற்குள் செல்ல முடியவில்லை, ஹெலிகாப்டர் வசதி வேண்டும்!'' -விவசாயி வினோத மனு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்ட கலெக்டர் டினா தாபிக்கு வினோதமான கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை ஜோராப்புராவை சேர்ந்த மங்கிலால் என்ற விவசாயி தான் அந்த வினோத மனுவுக்கு சொந்தக... மேலும் பார்க்க