திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு - அதிர்ச்சியில் பெற்றோர்;...
விரைவில் திருமணம் நடைபெற இதுவே எளிய பரிகாரம்; கல்யாண கங்கண பிராப்த பூஜைக்கான 6 காரணங்கள் என்னென்ன?
திருமண வரன் விரைவில் கிடைக்கவும் திருமண வாழ்வு சிறக்கவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் பாண்டிச்சேரியில் கல்யாண கங்கணப் பிராப்த பூஜை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு இனிய இல்லறத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

30 வயதைத் தாண்டியும் திருமணம் தள்ளிப் போகிறது என்றால் அவர்களின் நிலைமை கொஞ்சம் பரிதாபம் தான். உறவினர்களின் விசாரிப்பும் நண்பர்களின் கேள்விகளும் அக்கம்பக்கத்தாரின் பரிதாபப் பார்வைகளும் நிச்சயம் ஒருவித கவலையை உருவாக்கும். ஒருவருக்கு திருமணம் தள்ளிப்போக பல காரணங்கள் உண்டு என்கிறது ஆன்மிகம். தோஷங்கள்; சாபங்கள்; எனப் பல்வேறு காரணங்களால் திருமண வரன் கிடைக்காமல் இருப்பவர்களுக்கு அருமையானதொரு எளிய பரிகாரம் ஒன்றை சக்தி விகடன் பரிந்துரைக்கிறது.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு அடுத்த இடமான குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம் என்ற ஏழாமிடம், புத்திர ஸ்தானம் என்ற ஐந்தாமிடம், படுக்கை ஸ்தானம் என்ற பன்னிரண்டாமிடமும் சிறப்பாக அமைந்தால்தான் திருமணம் சீக்கிரம் நடைபெறும் என்றும் திருமண வாழ்வும் நிலைத்து இருக்கும் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதில் ஒன்று பாதகமாக அமைந்தாலும் திருமணம் தள்ளிப்போகும் என்பதும் ஜோதிடம் சொல்லும். இந்த பிரச்னைகள் தீரவே திருத்தல யாத்திரைகள், பூஜை, விரதங்கள் போன்றவை திருமண வரத்தை அளிக்கின்றன. அதிலும் திருமண வரத்தைக் கட்டாயமாக அருளும் கல்யாண கங்கணப் பிராப்த பூஜையில் சங்கல்பித்துக் கங்கணம் கட்டிக் கொண்டால் நிச்சயம் விரைவிலேயே வரன் கிடைத்து கெட்டிமேளம் முழங்கும் யோகம் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

கல்யாண வரமருளும் கடவுளரின் தனிச்சிறப்பானவர் ஸ்ரீகல்யாண வேங்கடேசர். பத்மாவதியைத் திருமணம் செய்த கோலத்தில், கையில் திருமணக் கங்கணத்தோடு இவர் சகலருக்கும் காட்சி தந்ததால் இப்பெயர் கொண்டார் என்கின்றன புராணங்கள். இந்த கோலத்தோடு திருமண வரம் அருளும் பரிகாரத் தலம் ஒன்று பாண்டிச்சேரியில் உள்ளது. புதுச்சேரி-கடலூர் எல்லையில் ஏம்பலம் தென்னம்பாக்கத்தில் அழகர் சித்தர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேசர் ஆலயம் உள்ளது.

திருப்பதி உற்சவர் கல்யாணக் கோலத்தில் அருள்வதுபோலவே இங்கு மூலவரே கல்யாணத் திருக்கோலத்தில் அருள்கிறார். இங்கு திருவோணம் மற்றும் ஏகாதசி நாளில் கட்டப்படும் கல்யாண கங்கணம் விஷேசமானது. மஞ்சள் தடவிய மஞ்சள் கங்கணத்தை பெருமாள் பாதத்தில் வைத்து கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. இதே நாளில் நடைபெறும் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனைகளும் விசேஷமானவை.
அந்த வகையில் சக்தி விகடன் வாசகர்களுக்கு திருமண வரன் உடனே கிடைக்கவும் திருமண வாழ்க்கை இனிமையாக அமையவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கல்யாண கங்கணப் பிராப்த பூஜை நடைபெறவுள்ளது. காலை 11.30 மணி அளவில் நடைபெறும் இந்த விசேஷ கல்யாணப் பரிகார பூஜையில் நீங்களும் கலந்துகொள்ளலாம். அதன் பலனாக, சிறப்பான இல்லற வாழ்வைப் பெறலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த கல்யாண கங்கணப் பிராப்த பூஜையால் 6 வகையான சிறப்பு பலன்களைப் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. அவை என்னென்ன!
1. எந்த வகையான திருமணத் தடைகள் இருந்தாலும் அவை நீங்கி உடனடியாக மாலை நோக்கம் எனும் திருமணம் நடைபெறக்கூடிய யோகத்தை இந்த பூஜை அளிக்கும்.
2. திருமண வாழ்வில் கசப்பும் துன்பமும் கொண்டுள்ளவர்களுக்கு இந்த பூஜை மாற்றி அமைக்கும். திருமண வாழ்வில் அமைதியும் இன்பமும் உண்டாக்கக் கூடிய யோகத்தை இந்த கங்கண பூஜை அளிக்கும்.
3. திருமண பந்தத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இறுக்கமானப் பிணைப்பை உருவாக்கி ஒரு வசீகரத்தை உண்டாக்கி இல்லறத்தை நல்லறமாக மாற்றித் தரும் வல்லமை கொண்டது இந்த பூஜை.
4. தீய சக்திகளின் விளைவால் மங்கல காரியங்கள் தடைபெற்று இருந்தால் அவை யாவும் உடனடியாக நிறைவேறும். குறிப்பாக பொருளாதாரச் சிக்கலால் திருமணம் தள்ளிப்போகிறது என்றால் இந்த கல்யாண கங்கணப் பிராப்த பூஜை நீங்கள் வேண்டிய செல்வத்தை ஆகர்ஷித்து அளிக்கும்.
5. விரும்பியவர்களை மணக்கவும், தேடி வரும் வரனை விரும்பியவாறு மாற்றவும் இந்த பூஜை நிச்சயம் உதவும்.
6. எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீகல்யாண வேங்கடேசரின் அருளால் அவர் திருக்கரத்தால் அளிக்கப்படும் ஸ்ரீகங்கணம் நிச்சயம் 48 நாள்களுக்குள் உங்களுக்கான இனிய வரனை அளிக்கும் என்பது ஐதிகம்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07