செய்திகள் :

விரைவில் 'வாடிவாசல்' படப்பிடிப்பு!

post image

விரைவில் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் விடுதலை - 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இதனால், ரெட்ரோ படத்தில் நடித்து முடித்த சூர்யா, அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை - 2 வெளியீட்டை முடித்துள்ளதால், வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.

வெற்றி மாறன் இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாகவும் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதையும் படிக்க: தருணம் திரையிடல் நிறுத்திவைப்பு... என்ன காரணம்?

வாடிவாசலில் நாயகியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாடிவாசல் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை உறுதிபடுத்தும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

'ஆம்பள’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள்.. ஹிப்ஹாப் தமிழா பகிர்ந்த பதிவு!

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து நடித்த ‘ஆம்பள’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜன.15) 10 ஆண்டுகள் ஆகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நகைச்சுவைக் கலந்த ஆக்‌ஷன் படமாக திரையரங்குகளில் வெளியான ஆம... மேலும் பார்க்க

23 தீவிரவாதிகள் கைது! வரைபடங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல்!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 23 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.அம்மாகாணத்தின் லாஹூர் நகர் பகுதியில் பஞ்சாப் காவல் துறையினர் மேற்கொண்ட... மேலும் பார்க்க

மூடுபனியால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்! 100 ஆடுகள் பலி! 3 பேர் படுகாயம்!

உத்தரப் பிரதேசத்தில் இன்று (ஜன.15) காலை நிலவிய மோசமான வானிலை மற்றும் மூடுபனியால் நெடுஞ்சாலையில் சென்ற வாகனஙக்ள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அம்மாநிலத்தின் அக்ரா-தில்லி நெடுஞ்சாலையில் இ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: வங்கதேசப் பெண்கள் 3 பேர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வாழ்ந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாணேவின் உல்ஹாஸ் நகர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலி... மேலும் பார்க்க

மத கஜ ராஜா வசூல் இவ்வளவா?

மத கஜ ராஜா திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்ப... மேலும் பார்க்க

ம.பி: காவலர்கள் முன்னிலையில் மகளை ஆணவக் கொலை செய்த தந்தை கைது!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் திருமணம்m செய்ய மறுத்த மகளை காவலர்கள் முன்னிலையில் அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.குவாலியர் மாவட்டம் கோலா கா மந்திர் எனும் பகுதியைச் சேர... மேலும் பார்க்க