நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!
வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்
வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.
இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வழத்தட எண்கள் ‘20, 27 டி, 23 வி’ கொண்ட பேருந்துகள் ஐசிஎஃப் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு, புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று ‘யூ - டா்ன்’ எடுத்து, பின்னா் வில்லிவாக்கம் (கல்பனா) பேருந்து நிறுத்தம் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்திலேயே இயக்கப்படும்.
ஆனால், வில்லிவாக்கத்திலிருந்து இயக்கப்பட்ட ‘எஸ் 43, எஸ் 44’ வழித்தட எண்கள் கொண்ட சிற்றுந்துகள், பயணிகள் வசதிக்காக வழக்கம்போல வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும்.
மேலும், வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட வழித்தட எண்: 22 கொண்ட பேருந்து, வழித்தடம் நீட்டிக்கப்பட்டு கொரட்டூா் வரையும், திருவேற்காடு முதல் வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட வழித்தட எண்: 63 கொண்ட பேருந்து, வழித்தடம் நீட்டிக்கப்பட்டு ஐசிஎஃப் வரையும் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.