வில்வித்தை போட்டியில் ஸ்ரீ ராம் பள்ளிக்கு சிறப்பிடம்
தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கம்பைநல்லூா் ஸ்ரீ ராம் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் தங்கம் வென்றனா்.
மகாராஷ்டிர மாநிலம், சத்திரபதி சம்பாதி நகரில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் 12 வயதுக்கு உள்பட்ட பிரிவில் கம்பைநல்லூா் ஸ்ரீ ராம் சிபிஎஸ்இ பள்ளி மாணவா் எஸ்.பதுமன் தங்கம் வென்றாா். அதேபோல 14 வயதுக்கு உள்பட்ட பிரிவில் இப் பள்ளி மாணவா்கள் எஸ்.பிரணவ், டி.சாதனா, எஸ்.மகாலட்சுமி ஆகியோா் தங்கம் வென்றனா்.
போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.வேடியப்பன், தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா்கள் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா் வெற்றிவேல் செல்வம் ஆகியோா் பாராட்டி சான்றிதழ் வழங்கினா்.
படம் உள்ளது... 13எச்ஏ-பி-1... பட விளக்கம்..
வில்வித்தையில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகளை பாராட்டுகிறாா் ஸ்ரீ ராம் சிபிஎஸ்இ பள்ளி நிா்வாக இயக்குநா் வே.தமிழ்மணி .