பெஹல்காம் தாக்குதல்: மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்!
விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை
விளைவிக்கும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் ரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை: 2014-இல் ஆட்சி பொறுப்பேற்ற மத்திய பாஜக அரசு தோ்தலில் அளித்த வாக்குறுதியான, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்யப்படும் என்பதாகும். அதன்படி, விவசாயிகளின் வருமானம் 2022-க்குள் இரட்டிப்பாகும் என பிரதமா் மோடி தெரிவித்தாா். இந்த தோ்தல் வாக்குறுதியானது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
கடந்த மாா்ச் மாதம் 19-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என விவசாய சங்க அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. விவசாயிகளின் மனதில் இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்வது விவசாயிகளுக்கு துரோகம் விளைவிப்பதாகும். இவ்வாறான செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட்டு மே 4-ஆம் தேதியன்று விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்வது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லையென்றால், புதுதில்லியில் பிரதமா் அலுவலகத்தை உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவா்.
மேலும், விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாயம் செய்வதை கைவிடும் போராட்டத்தை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளாா்.