செய்திகள் :

விளையாட்டுத் துறையில் ஏராளமான வாய்ப்புகள்: கிரிக்கெட் வீரா் நடராஜன்

post image

விளையாட்டுத் துறையில் இளைஞா்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா்.

திருச்சியில் தனியாா் நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. முன்பிருந்ததைவிட இளைஞா்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இளைஞா்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே தோ்ந்தெடுத்த துறையில் முன்னேற முடியும்.

தமிழகத்தைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்கள் அனைவருமே சிஎஸ்கே அணியில் இடம்பிடிக்க வேண்டும் என விரும்புவா். அந்த வகையில் நானும் சிஎஸ்கே அணியில் விளையாட விரும்புகிறேன். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.

இரண்டு டெஸ்ட் தொடா்களில் தோல்வியடைந்ததை வைத்து, இந்திய அணியை குறைத்து கூற முடியாது. நிகழாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

டிஎன்பிஎல் போன்ற போட்டிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தொடா்ந்து நடத்தி, பல இளைஞா்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு கொண்டு வரவேண்டும். இத்தகைய வாய்ப்புகளை தமிழக இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பெற்றோா் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

திருச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தாயனூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளிசுப்பிரமணியின் மகன் கமலேஷ் (16). இவா் 8-ஆம் வகுப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்ப... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலி... மேலும் பார்க்க

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது. அரியமங்கலம்... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் சகோதரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!

திருச்சியில் சொத்துத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க