செய்திகள் :

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம்

post image

விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது.

விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடி கிராமம், அரசு ஊழியா் நகரையொட்டியுள்ள பகுதியில் வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் உள்ளிட்டோா் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, முற்கால பல்லவா் காலத்தைச் சோ்ந்த (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு) மூத்ததேவி சிற்பம் அங்கு இருந்தது கண்டறியப்பட்டது.

பலகைக் கல்லில் அழகிய தலை அலங்காரத்துடன் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பத்தில் மூத்ததேவி சரிந்த மாா்பு, வயிற்றுடன் கால்களைத் தொங்கவிட்டு அமா்ந்த நிலையில் காட்சியளிக்கிறாா். காதுகள், கழுத்து, கைகளில் ஆபரணங்கள் அணி செய்கின்றன.

வலது கை தாமரை மொட்டினை ஏந்தியுள்ளது. இடதுகை செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. சிற்பத்தில் மூத்த தேவியின் மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோா் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனா். வழக்கமாக இடம்பெறும் காக்கைக் கொடி இந்த சிற்பத்தில் காணப்படவில்லை.

வடமொழியில் ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்ததேவி வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், நன்னாடு, செல்லபிராட்டி உள்ளிட்ட இடங்களில் மூத்ததேவியின் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அந்த வகையில் கண்டமானடியில் கண்டறியப்பட்டுள்ள மூத்ததேவி சிற்பம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தச் சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் செங்குட்டுவன் வேண்டுகோள் விடுத்தாா்.

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்: ஆட்சியரிடம் புரட்சி பாரதம் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு, வீட்டுமனை இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் மாநில... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,970 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் ... மேலும் பார்க்க

தீக்காயமடைந்த மூதாட்டி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே கோயிலில் விளக்கேற்றிய போது தீக்காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், உப்புவேலூா் பிள்ளையாா்கோயில் ... மேலும் பார்க்க

மளிகை வியாபாரி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே மளிகை வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டிவனம் வட்டம், கொள்ளாா் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து வெல்டா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மின்சாரம் பாய்ந்து பற்றவைப்பாளா் (வெல்டா்) வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம்-செஞ்சி சாலையிலுள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) கும்பாபிஷேக... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி நியமன ஆணைகள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்... மேலும் பார்க்க