செய்திகள் :

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து!

post image

விழுப்புரம் : பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண். 16854), மே 18,20,21,22,25,27,28,29, ஜூன் 1,3 ஆகிய தேதிகளில் காட்பாடி - திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.

எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி -விழுப்புரம் விரைவு ரயில் (வண்டி ண்.16853), மே 18,20,21,22,25,27,28,29, ஜூன் 1, 3 ஆகிய தேதிகளில் திருப்பதி -காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வாழு, வாழவிடு! ஆர்த்தி குடும்பத்தைக் கடுமையாகச் சாடிய ரவி மோகன்!

வனக்காப்பாளா்கள் பணியின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்: வனத் துறை அமைச்சா் அறிவுரை

வனத் துறையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் பணியின்போது மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும் என்று வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவா்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கையை உடனடியாகத் தொடங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில... மேலும் பார்க்க

ஒருநாள் சுற்றுலா பயண திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம்: சுற்றுலாத் துறை!

சென்னை, புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கான ஒருநாள் சுற்றுலா பயணத் திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம் என தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைக்கோள்! - இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து மே 18-இல் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறினாா். பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை காலை சென்னை விமான நிலையம் வ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயிலில் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை முடங்கியது!

மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை பல மணி நேரம் முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக வரிசையில் நின்று காகித டிக்கெட் எட... மேலும் பார்க்க

மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் ... மேலும் பார்க்க