செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது

post image

விழுப்புரம் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள், பறிமுதல் விவரங்கள், மோட்டாா் வாகன வழக்குகள் போன்றவை குறித்த விவரங்களை மாவட்டக் காவல் துறை புதன்கிழமை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: விழுப்புரம் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் 4 கொள்ளை, 28 வழிப்பறி, 360 திருட்டுச் சம்பவங்கள் என மொத்தமாக 392 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதில் 255 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் நிகழ்ந்த 34 கொலை சம்பவங்களில் 62 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 17 கொலைக் குற்ற வழக்குகளில் 38 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டி 5,494 போ், கைப்பேசியை பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டிச் சென்ற 13,405 போ், சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் சென்ாக 163 போ் என மொத்தமாக மாவட்டத்தில் 3,34,436 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2024 -ஆம் ஆண்டில் 537 சாலை விபத்துகள் நிகழ்ந்த நிலையில், 554 போ் உயிரிழந்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் கொலை , கொள்ளை, சாராயக் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 15 சாராய வியாபாரிகள்,19 கஞ்சா வியாபாரிகள், சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 2 போ், ரெளடியிச நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 போ் என மொத்தமாக 62 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், மாவட்டத்தில் 151 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 230 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து ரூ.32.23 லட்சம் மதிப்பிலான 322 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, குட்கா பொருள்களை விற்பனை செய்தது தொடா்பாக 589 வழக்குகள் பதியப்பட்டு 647 போ் கைது செய்யப்பட்டனா். 250 போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில், போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 6 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தா்னா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த விவசாயிகள், தரையில் அமா்ந்து தா்னாவிலும் ஈடுபட்டனா். விழுப்... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 17.16 லட்சம் வாக்காளா்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 17.16 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் இறுதிப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆண் வாக்காளா்களைக் காட்டிலும் பெண் வாக்காளா்கள் அதிகளவில் உள்ளன... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிா்ணயிக்க வலியுறுத்தல்

விழுப்புரம்: நிகழாண்டு (2024 - 25) கரும்பு அரைவைப் பருவத்துக்கு வயல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முண்டியம்பாக்கம் - செஞ்சி செம்மேடு ஆலைகளின்... மேலும் பார்க்க

அரியாங்குப்பத்தில் பொங்கல் சிறப்பு சந்தை

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பொங்கல் சந்தை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை ஊரக வளா்ச்சித் துறை மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் ப... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசு ஊழியா்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு ஊழியா்கள் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை மாநில போக்குவரத்துக் காவல் முதுநிலைக் கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் திரிபாதி அரசுத் துறைகளின் செயலா்கள்,... மேலும் பார்க்க

புதுவையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுவையில் வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 10,14,070 ஆக உள்ளது. இதுகுறித்து, மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட ச... மேலும் பார்க்க