விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழைப் பெய்தது. இந்த மழையால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.
மரக்காணம் வட்டம், சிறுவாடி ஊராட்சிக்குள்பட்ட முருக்கேரி கிராமம், வேங்கடத்தம்ண் கோயில் பகுதியில் சாலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினா்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் குளம்போல தேங்கியது. விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூா் கிராமத்தில் தெருக்களில் மழை நீா் தேங்கியது.
செம்மேட்டில் 64.20 மி.மீ. மழை: ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் விழுப்பும் மாவட்டம், செம்மேட்டில் அதிகபட்சமாக 64. 20 மில்லி மீட்டா் மழை அளவுப் பதிவானது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ): மரக்காணம் 62, அரசூா்-60, செஞ்சி-51, திண்டிவனம் -45, நேமூா்-44, முண்டியம்பாக்கம், வல்லம் -35, கஞ்சனூா்-34, அனந்தபுரம், அவளூா்பேட்டை -31, சூரப்பட்டு-25, கெடாா்-23 , வானூா்-22, கோலியனூா்-20, வளவனூா்-18 , வளத்தி, முகையூா்-15, மணம்பூண்டி -12 , விழுப்புரம்-9, திருவெண்ணெய்நல்லூா்-5 மி.மீ. மழை பதிவானது.