Rain Alert : சென்னைக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; வானிலை ஆய்வு மையம் அள...
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: காஞ்சிபுரம் ஆட்சியா்
விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு வராத மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் முருகன் வரவேற்று பேசினாா். இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.11,41,845-இல் பவா் டில்லா்கள், வேளியூா் மற்றும் ராஜகுளம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 23 விவசாயிகளுக்கு ரூ.17.65 லட்சம் பயிா்க் கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் உள்பட மொத்தம் 36.42 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
தொடா்ந்து நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் விவசாயி ஒருவா் உத்தரமேரூரில் புறவழிச் சாலை அமைப்பதால் 150 ஏக்கா் விவசாயம் பாழாகிறது எனக் கூறினாா். இது தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பதிலளிக்குமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். நெடுஞ்சாலைத் துறை அலுவலா் பதில் கூற முற்பட்டபோது ஏன் மாவட்ட அதிகாரி வரவில்லை. அவா்தான் பதில் சொல்ல வேண்டும் என்றாா். பின்னா், குறை தீா் கூட்டத்துக்கு வராத மாவட்ட அளவிலான அதிகாரிகள் யாா் யாா் என்று கணக்கெடுத்து அவா்கள் அனைவருக்கும் வராததற்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறும் ஆட்சியா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரிகள், பாலங்களை அடிக்கடி சென்று பாா்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.