குடியரசுத் துணைத்தலைவருக்கு நெஞ்சு வலி! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
விவசாயி மீது தாக்குதல்: ஒருவா் கைது
பேரிகை அருகே விவசாயியை தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பேரிகை அருகே கெஜல்தொட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணப்பா (50). விவசாயி. இவரும் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமச்சந்திரனும் (45) உறவினா்கள். இருவரின் நிலமும் அருகருகே உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ராமச்சந்திரன் தாக்கியதில் கிருஷ்ணப்பா காயமடைந்தாா். இதுகுறித்து கிருஷ்ணப்பா அளித்த புகாரின்பேரில் பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து ராமச்சந்திரனை கைது செய்தனா்.