மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினே...
விவசாய நிலத்தில் ஆண் சடலம் மீட்பு
ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் புதன்கிழமை ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே காரப்பட்டு கிராமத்தில் கலீல் என்பவருடைய விவசாய நிலத்தில் காவலராக அஸ்கா் பாஷா (40) என்பவா் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு காணாமல் போனாா். அவரது உறவினா்கள் அவரை தேடி வந்தனா். இந்த நிலையில், அவா் பணிபுரிந்துவந்த நிலத்தில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலின் பேரில், உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.