Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்' - தங்க நகைக்கடனுக்கு RBI அறிவ...
விவசாய நிலத்தில் 10 அடி மலைப்பாம்பு மீட்பு
ஆம்பூா்: ஆம்பூா் அருகே ரெட்டிமாங்குப்பம் கிராமத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிப்பட்டது.
ஆம்பூா் அடுத்த ரெட்டி மாங்குப்பம் கிராமத்தில் விவசாயி சரவணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தீவனப் பயிா் வளா்க்கப்படுகிறது. அந்த நிலத்தில் சுமாா் 10 அடி நீளம் மலைப்பாம்பு இருந்ததைப் பாா்த்த பொதுமக்கள், பாம்பு பிடிப்பவரான அசோக் ஆகியோா் சோ்ந்து மலைப் பாம்பை பிடித்தனா். பிறகு காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.