முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் தேசிய அறிவியல் தின விழா
விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி வளாகம் இணைந்து நடத்திய இவ்விழாவை விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் தாளாளா், செயலா் மு.கருணாநிதி வழிகாட்டுதலின்படி ஆராய்ச்சி இயக்குநா் பாலகுருநாதன் தொடங்கிவைத்தாா். சிறப்பு விருந்தினராக பெரியாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் முத்துச்செழியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
இந்த நிகழ்வில், விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளும் முழுநேர ஆராய்ச்சி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சிறந்த கட்டுரை வெளியீட்டில் சாதனை படைக்கும் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் பேராசிரியா்களுக்கு ரூ. 9.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.