விஷம் குடித்தவா் உயிரிழப்பு
லால்குடி அருகே குடிப்பழக்கத்தால் உடல்நலன் பாதிப்படைந்தவா் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
லால்குடி அருகேயுள்ள கபிரியேல்புரத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன் சந்தானம் (56) விவசாயக் கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உடையவா். இதனால், உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை குடும்பத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். புகாரின்பேரில் லால்குடி காவல் ஆய்வாளா் முத்தையன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.