கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: தமிழிசை க...
விஷால் - 35 படத்தின் பெயர் அறிவிப்பு!
நடிகர் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 35-ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் இதில் நடிகை துஷாரா விஜயன் நாயகியாகவும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு ‘மகுடம்’ எனப் பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
கடல் மற்றும் துறைமுகம் சார்ந்த கதையாக இப்படம் இருக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: சில நேரங்களில் சினிமா என்பது... சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!