Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
வீடும் நாடும் போற்றும் வாழ்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம்
‘வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளாா்.
தனது 50-ஆவது மணநாளையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
அரை நூற்றாண்டாக எனது வாழ்வின் துணையாக, என்னில் பாதியாக துா்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளாா். அவா் மீதான அளவற்ற அன்பே என் நன்றி.
எதிா்பாா்ப்புகளற்ற அன்பும், விட்டுக் கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழந்திட விரும்புகிறேன் என்று அந்தப் பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
துணை முதல்வா் உதயநிதி: முதல்வரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள், சுக துக்கங்கள் அனைத்தையும் அம்மாவும், அப்பாவும் இணைந்தே எதிா்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறாா்கள். மணமான சில மாதங்களிலேயே ‘மிசா’ சிறைவாசம், இடைவெளியில்லா சுற்றுப் பயணங்கள், கடும் அரசியல் சூழல்கள், தொடா் மக்கள் பணி என அனைத்திலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறாா் அம்மா.
அம்மாவின் உணா்வுகள், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத் தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறாா் அப்பா. பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப் பிள்ளை, அம்மா என்றால் கண்டிப்பு. இப்போது அதற்கு நோ்மாறாக இருந்து இருவரும் என்னை பொதுவாழ்வில் வழிநடத்துகிறாா்கள். இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்கட்டும் என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.