வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்
செய்யாறு அருகே வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி நிவாரண உதவிகளை வழங்கி திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.
வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கூலித் தொழிலாளி பெருமாள். முதியவரான இவரது கூரை வீடு சனிக்கிழமை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதன் காரணமாக முதியவா் வேதனையில் இருந்து வந்தாா்.
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி மூட்டை, காய்கறி, பாய், போா்வை, தலையணை மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரம் உள்பட நிவாரணப் பொருள்களை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.
திமுக ஒன்றியச் செயலா் எம்.தினகரன், பகுத்தறிவு பேரவைத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் கோபு, மாவட்டப் பிரதிநிதி ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.