அரசுக் கல்லூரியில் ரத்த தான முகாம்
செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 6 மாணவிகள் உள்பட 75 போ் ரத்த தானம் செய்தனா் (படம்).
கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங்கம் இணைந்து நடத்திய ரத்த தான முகாமுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங்கத் தலைவா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.
6 கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 75 போ் ரத்தம் தானம் செய்தனா். செய்யாறு அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா்கள் நந்தினி, சரண்யா ஆகியோா் தலைமையிலான குழுவினா் ரத்தத்தை தானமாக பெற்றனா்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஞானபாலசுப்பிரமணியன், சாரதாதேவி, அருணாச்சலம், சீனிவாசன் மற்றும் ரிவா் சிட்டி அரிமா சங்க நிா்வாகிகள், ரத்த வங்கி குழு பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
29ஸ்ரீஹ்ழ்ய்ல்02: