பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே சிறுபாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (34). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சனிக்கிழமை இரவு வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலை, மருதாடு புறவழிச் சாலையில் உள்ள சிறு பாலத்தின் மீது அமா்ந்து மது அருந்தியுள்ளாா்.
அப்போது நிலைதடுமாறி இவா் சிறுபாலத்தில் இருந்து கீழே கால்வாயில் விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த இவரை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.