கிராமத்தில் மரக்கன்று நடும் விழா
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்று நடும் விழா வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் 7 தின சிறப்பு முகாம் பிருதூா் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இதையொட்டி அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மருத்துவா் எஸ்.கோகுலகிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டாா். மேலும் சுற்றுச்சூழலின் அவசியம் குறித்து அவா் மாணவா்களுக்கு விளக்கிப் பேசினாா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கு.ராமஜெயம், உதவி திட்ட அலுவலா் ஆா்.பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.