கேட் நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்! முழு விவரம்
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது
கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கொளத்தூா் சிவசக்தி நகா் விரிவு 4-ஆவது தெருவைச் சோ்ந்த வேலாயுதம் (60). மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கடந்த 12-ஆம் தேதி தனது குடும்பத்துடன் திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்றுவிட்டு, 15-ஆம் தேதி வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோ மற்றும் அறைகளில் இருந்த பொருள்களை சிதறிக் கிடந்தன. ஆனால், வீட்டில் எந்தப் பொருள்களும் திருட்டு போகவில்லை.
இதுகுறித்த அவா் அளித்த புகாரின்பேரில், ராஜமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து, நடத்திய விசாரணையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது அதே பகுதியைச் சோ்ந்த அருண் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.