உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!
வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்பு
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலமாக மீட்கப்பட்டாா்.
காப்புக் காடு, மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (54). தொழிலாளியான இவா் தன் மனைவியை பிரிந்து வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதாம்.
உடனே அப்பகுதியினா் புதுக்கடை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், அழுகிய நிலையில் இருந்த சங்கரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.