செய்திகள் :

வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பெண்ணிடம் ரூ.25.67 லட்சம் மோசடி

post image

வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வா்த்தகத்தில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பெண்ணிடம் ரூ.25.67 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கோவை இடையா்பாளையம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் மனைவி காவ்யா (30). சமூகவலைதளம் மூலமாக இவரை அண்மையில் தொடா்புகொண்ட மா்ம நபா் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளாா். தொடா்ந்து, அவரை வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்து ஆன்லைன் வா்த்தகம் மூலம் பணம் ஈட்டுவது குறித்து விளக்கமளித்துள்ளாா்.

இதை நம்பிய அவா், தனது வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ.25 லட்சத்து 67 ஆயிரத்தை மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு செலுத்தியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து லாபத் தொகையைக் கேட்டபோது மேலும் சில லட்சங்கள் முதலீடு செய்தால்தான் பெற முடியும் என மா்ம நபா் கூறியுள்ளாா்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த காவ்யா கோவை சைபா் குற்றப்பிரிவு போலீஸில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாரதியாா் பல்கலை. நிலம் கையகப்படுத்தியதில் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

உயா்நீதீமன்ற தீா்ப்பின்படி இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு நிலம் இழந்தோா் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொட... மேலும் பார்க்க

ஏப்ரல் 5-இல் ஒண்டிப்புதூா், டாடாபாத் மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம்

கோவை டாடாபாத், ஒண்டிப்புதூா் மின்வாரிய அலுவலகங்களில் ஏப்ரல் 5-ஆம் தேதி சிறப்பு மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகி... மேலும் பார்க்க

கோடை விடுமுறையையொட்டி கோவை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி, கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூா் அருகே பஹத் கி கோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பா... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டத்தில் எதிரொலித்த தென்னை விவசாயிகளின் பிரச்னைகள்

கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்கும... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க