தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
வீட்டில் பதுக்கப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி உத்தரவின் பேரில் எஸ்.பி தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வாணியம்பாடி ஜீவாநகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இதில் வீட்டினுள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா் (படம்). இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜான் பாஷா(45) என்பவரை கைது செய்தனா்.