வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் வீட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா பெரியகம்மவார தெருவில் வசிக்கும் முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி வீட்டில் சுமசாா் 5 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று சுமாா் 1 மணி நேர முயற்சிக்கு பிறகு பாம்பை மீட்டு கொண்டு சென்று காப்புக் காட்டில் விட்டனா்.