செய்திகள் :

``வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம்; கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல" - அஸ்வின் அதிரடி

post image
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆடிய இரண்டு டெஸ்ட் தொடர்களில் அடைந்த மோசமான தோல்வி, சீனியர் முதல் ஜூனியர் வரை இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களையும் ரஞ்சி டிராபியில் விளையாடும் கட்டாய நிலைக்குத் தள்ளியது.

அதன்படி, 9 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித்தும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலியும் ரஞ்சியில் களமிறங்கினர். ஆனால், இரண்டு பேருமே சமீபகால சொதப்பல் ஃபார்மை விட்டுக்கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

விராட் கோலி

அதிலும், விராட் கோலி களமிறங்கிய ஆட்டத்தைக் காண டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பெருமளவில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், ரயில்வேஸ் அணியின் ஹிமான்ஷு சங்வான் பந்துவீச்சில் ஸ்டம்ப் பறக்க கிளீன் போல்டாகி 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார் கோலி. இதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, ``அவர் ரஞ்சி விளையாடத் தேவையில்லை. 81 சதங்கள் அடுத்தவரின் நுட்பம் நன்றாகவே இருக்கிறது. அவரை வற்புறுத்த வேண்டாம்.' என்று கோலிக்கு ஆதரவாகப் பேச, மறுபக்கம் கோலியின் வருகையால் ரஞ்சி டிராபி ஆசிர்வதிக்கப்பட்டது போலாகிவிட்டது என்று ரசிகர்கள் சிலாகித்தனர்.

இந்த நிலையில்தான், ``வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம், கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல." என்று அதிரடியான கருத்தை தெரிவித்திருக்கிறார் சமீபத்தில் ஓய்வுபெற்ற இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின், `` `ரஞ்சி டிராபி ஆசிர்வதிக்கப்பட்டது' என்று ஒரு ட்வீட்டைப் பார்த்தேன். நான் கேட்கிறேன், ரஞ்சி டிராபியின் வரலாறு தெரியுமா... பல ஆண்டுகளாக இது நடைபெற்று வருகிறது. இது ஒரு முதன்மையான தொடர்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

சச்சின் ஒரு லெஜண்டரி கிரிக்கெட்டர். அவர் எல்லா நேரமும் ரஞ்சியில் ஆடியிருக்கிறார். இதில் விளையாடுவதால் வீரர்கள்தான் பயனடைவார்கள். எனவே, வீரர்களுக்குதான் கிரிக்கெட் முக்கியமே தவிர, கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல." என்று கூறினார்.

Kohli: "உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்" - க்ளீன் போல்டாக்கிய ரஞ்சி வீரரிடம் கோலி கூறியதென்ன?

`மாடர்ன் கிரிக்கெட்டின் ரன் மெஷின்' என்றழைக்கப்படும் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, ஜனவரி 30-ம் தேதியன்று ரயில்வேஸ் அணிக்கெதிரான ரஞ்சி டிராபியில் களமிறங்கினர்.கோலியின் வருகையால் டெ... மேலும் பார்க்க

Abhishek Sharma: `37 பந்துகளில் சதம்' - இங்கிலாந்து Ex பிரதமர் முன்னிலையில் அதிரடி காட்டிய அபிஷேக்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ... மேலும் பார்க்க

U19 Women's T20 World Cup: மீண்டும் சாம்பியன்... தென்னாப்பிரிக்காவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகுடம் சூடியிருக்கிறது இந்திய மகளிர் அணி.மல... மேலும் பார்க்க

"மனைவி பார்த்துக்கொண்டிருப்பார்; அதைச் சொல்ல முடியாது" - மந்தனாவின் கேள்விக்கு ரோஹித்தின் பதிலென்ன?

உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்களுக்கு ஆண்டுதோறும் BCCI சார்பில் விருது வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று... மேலும் பார்க்க

BCCI Awards: வாழ்நாள் சாதனையாளர் சச்சின், ஸ்பெஷல் அவார்ட் அஸ்வின்... யார், யாருக்கு பிசிசிஐ விருது?

கிரிக்கெட் சிறந்து விளங்கும் மற்றும் சாதனை புரிந்த இந்திய வீரர்களுக்கு இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023-24ம்... மேலும் பார்க்க

Virat Kohli: 6 ரன்னில் க்ளீன் போல்ட்; மீண்டும் ஏமாற்றிய கோலி; ரஞ்சியில் தடுமாறும் சீனியர்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் (NZ 3 - 0), வெளிநாட்டில் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் (AUS 3 -1) படுமோசமான தோல்வியைச் சந்தித்தது.இந்திய அணியின் இத்தகைய தோல்விக்கு... மேலும் பார்க்க