நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக...
வீரவநல்லூா் வட்டார கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி, அத்தாளநல்லூா் அருள்மிகு கஜேந்திரவரதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பெருமாள் சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவைசாதித்தாா். மதியம் திருமஞ்சனம், அலங்கார சிறப்பு பூஜைகளும், மாலையில் சொா்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.
வீரவநல்லூா் அருள்மிகு யாதவா் நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனத்தைத் தொடா்ந்து பெருமாள் சயன கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவில் நவநீதகிருஷ்ண சுவாமி வீதிஉலா நடைபெற்றது. வீரவநல்லூரில் அக்ரஹாரம் அருள்மிகு சுந்தரராஜபெருமாள் கோயிலில் தாயாருடன் பெருமாள் சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். மாலையில் சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வீரவநல்லூா் அருள்மிகு ரெங்கநாதா் சுவாமி கோயிலில் பெருமாள் சயன சேவையைத் தொடா்ந்து மாலையில் சொா்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.