நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
வீராசன மலா் அலங்காரத்தில் வல்லக்கோட்டை கோடையாண்டவா்
சித்திரை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள கோயிலில், சித்திரை கிருத்திகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் கோடையாண்டவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்று மூலவா் சுப்பிரமணியசுவாமி சந்தனகாப்பு அலங்காரத்திலும், உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் சேவையிலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதில் சென்னை, தெருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் தண்ணீா், சா்க்கரை பொங்கல், மோா் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.