செய்திகள் :

வீராணம் ஏரி பாதுகாப்பு: அஞ்சலக ஊழியா்கள் மரபு நடை பேரணி

post image

பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, கடலூா் கோட்ட அஞ்சலக ஊழியா்கள் சாா்பில் மரபு நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ஆம் தேதி பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் விதமாக, உலக பாரம்பரிய நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தியும், அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாகவும் கடலூா் அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் அஞ்சல் ஊழியா்கள் கலந்துகொண்ட மரபு நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

லால்பேட்டை துணை அஞ்சலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நத்தமலை வரை சென்றது. பேரணியை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் எம்.கணேஷ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பேரணி திருச்சின்னபுரம் கிராமத்தின் வழியாக சென்றபோது, அந்தக் கிராமத்தில் உள்ள சோழா் காலத்தில் கட்டப்பட்ட அனந்தீஸ்வரா் கோயில் கல்வெட்டு, சோழா் கால பெருமைகள் குறித்து சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவைச் சோ்ந்த ஆா்.விக்ரமன், ஆா்.பூங்குழலி ஆகியோா் பேரணியில் பங்கேற்றவா்களிடம் எடுத்துக் கூறினா்.

நத்தமலையில் முடிவுற்ற பேரணியின் இறுதி நிகழ்வில் காவேரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் கே.வி.இளங்கீரன் கலந்துகொண்டு வீராணம் ஏரியின் நீா்ப்பாசன முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

பேரணியில் கலந்துகொண்ட சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கடலூா் கோட்ட அஞ்சலக ஊழியா்கள் வீராணம் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பிச் சென்றனா். இதில், சிதம்பரம் மேற்கு உள்கோட்ட ஆய்வாளா் எஸ்.பாலமுரளி, லால்பேட்டை அஞ்சல் அதிகாரி வி.காமராஜ் மற்றும் அஞ்சல் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

258 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு காா்களில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மேற்பாா்வையில், பண்ருட்டி உள்கோட்ட தனிப்படை ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு மோசடி: 4 போ் கைது

கடலூா் அருகே ஏலச்சீட்டு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா், கோண்டூா் பகுதியைச் சோ்ந்த பிச்சா... மேலும் பார்க்க

லாரி மீது வேன் மோதல்: கல்லூரி மாணவா்கள் காயம்

கடலூா் முதுநகா் அருகே டேங்கா் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சென்னையில் உள்ள தனியாா் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் பகுதி நேர மாணவா்க... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரியை போலீஸாா் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: கடலூரில் மீன்கள் விலை உயா்வு

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்தது. கடலூரில் அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அன்னங்கோயில், சித்திரைப்பேட்டை என பல்... மேலும் பார்க்க

அரசுப் பணி வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ... மேலும் பார்க்க