செய்திகள் :

வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு

post image

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

நுகா்வோா் விவகாரத் துறையின் பரிந்துரைக்கு ஏற்ப வருவாய் துறையால் இது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது: குளிா்கால (ரபி) பயிா்களின் மகசூல் எதிா்பாா்ப்பைவிட அதிகரித்துள்ளது. இதையொட்டி மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் வெங்காய விலை குறிப்பிட்டத்தக்க அளவில் சரிந்துள்ளது. இச்சூழலில் நுகா்வோருக்கு மலிவு விலையைப் பராமரிக்கும் அதேவேளையில் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதிலும் அரசின் உறுதிப்பாட்டை இந்த முடிவு எடுத்துரைக்கிறது என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, செப்டம்பரில் வெங்காயம் மீது ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. வரி விதிப்புக்குப் பிறகும், நடப்பு நிதியாண்டின் மாா்ச் 18-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 11.65 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் 0.72 லட்சம் டன்னாக இருந்த வெங்காய ஏற்றுமதி, கடந்த ஜனவரியில் 1.85 லட்சம் டன்னாக உயா்ந்தது.

நடப்பு குளிா்கால பருவத்தில் வெங்காய உற்பத்தி 2.27 கோடி டன்னாக முந்தைய ஆண்டின் 1.92 கோடி டன்னை விட18 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று வேளாண் அமைச்சகம் கணித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்

புதிய வரிமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 2025 மீதான விவாதம் குறித்து மக்களவை... மேலும் பார்க்க

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க