சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
தருமபுரி: தருமபுரியை அடுத்த மாரண்டஹள்ளி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் உதவி எண்ணுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸாா் காவல் நிலையத்தில் சோதனை நடத்தினா். மேலும், காவல் உதவி எண்ணுக்கு வந்த கைப்பேசி எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் பாலக்கோடு வட்டம், குஜ்ஜாரஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த சி. பொன்முடி (45) என்பது தெரியவந்தது. தலைமறைவான அவரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.