ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது
தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை இரவு விநாடிக்கு 28,000 கனஅடியாகக் குறைந்தது.
புதன்கிழமை காலை விநாடிக்கு 1 லட்சத்து 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து இரவு 57,000 கனஅடியாகவும், வியாழக்கிழமை காலை 6 மணிக்கு 32,000 கனஅடியாகவும் படிப்படியாக குறைந்து இரவு 8 மணி நிலவரப்படி 28,000 கனஅடியாக உள்ளது.