தருமபுரி அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
தருமபுரி: தருமபுரி அருகே ஏரியில் வளா்க்கப்பட்ட மீன்கள் கடந்த இரண்டு நாள்களாக செத்து மிதந்து கரை ஒதுங்கியுள்ளன.
தருமபுரியை அடுத்த வெங்கட்டம்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு விவசாயம், கால்நடைகள் வளா்ப்பது முக்கிய தொழிலாக உள்ளது. அப்பகுதியில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் உள்ள ஏரியில் மீன் வளா்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக ஏராளமான மீன்கள் செத்து மிதந்து கரை ஒதுக்கியுள்ளன. அடுத்தடுத்து மீன்கள் அனைத்தும் இறந்து மிதப்பதால் ஏரியிலிருந்து துா்நாற்றம் வீசுகிறது.